2025 ஜூலை 17, வியாழக்கிழமை

காணி உறுதி வழங்கும் நடமாடும் சேவை

Kogilavani   / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

புதிய அரசாங்கத்தின் நூறுநாள் வேலைத்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட காணி உறுதியற்றவர்களுக்கு காணி உறுதி வழங்கும் நடமாடும் சேவை, டிக்கோயா தரவளை கிறிஸ்தவ ஆலய கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை(7) நடைபெற்றது.

தரவளை அரச காணியில் குடியிருக்கும் சுமார் 180க்கும் மேற்பட்ட குடும்பங்களின் காணி பிரச்சினைக்கு இதன்போது தீர்வு காணப்பட்டுள்ளது.

100 நாள் வேலைத்திட்டத்தில் காணி தொடர்பான பிரச்சினைகளை உள்ளடக்கியதற்காக அரசாங்கத்துக்கு டிக்கோயா கொலனி மக்கள், தங்களது நன்றியை கூறிக்கொண்டதோடு இந்த நடமாடும் சேவையை ஏற்பாடு செய்து தந்த அம்பகமுவை பிரதேச சபை தலைவருக்கு தங்களது நன்றிகனை தெரிவித்துக்கொண்டார்கள்   

இந்நடமாடும் சேவை டிக்கோயா 319 தரவளை கொளனி கிராம சேவகர் க.கிருஷ்ணமூர்த்தி  வனராஜா பிரிவு கிராமசேவையாளர் டார்வின் என்பீல்ட் கிராமசேவையாளர் சண்முகராஜர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதிலே மத்திய மாகாண உதவி காணி ஆணையாளர் மற்றும் நுவரெலியா மாவட்ட காணி உத்தியோகஸ்;தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X