Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Kanagaraj / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
19ஆம் அரசியல் சீர்த்திருத்தமும் தேர்தல் மறுசீரமைப்பும் எனும் தலைப்பில் திறந்த கலந்துரையாடலை மலையகம் ஆய்வகம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த திறந்த கலந்துரையாடல் நாளை 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிமுதல் ஹட்டன் நகரசபை மண்டபத்தில் ஹட்டன் டிக்கோயா நகரசபை தலைவர் டாக்டர் அழகமுத்து நந்தகுமார் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் ஆய்வாளரும், எழுத்தாளருமான திரு. ஏ. லோறன்ஸ்; தேர்தல் மறுசீரமைப்பு குறித்த ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பங்குப்பற்றுனர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு குறித்த ஆவணம் முழுமைப்படுத்தப்பட்டு மலையக அரசியல் கட்சிகளுக்கிடையேயும், பின்னர் தேசிய மட்ட கட்சிகளுக்கிடையிலும் ஆவணம் பற்றிய நியாயப்பிரச்சாரங்களை மேற்கொள்வதற்குதிட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, இந்த கலந்துரையாடலுக்கு தொழிற்சங்க, கட்சி, அரசியல், வேறுபாடுகள் காட்டாது மலையக மக்களின் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் அனைவரையும் கலந்துகொண்டு தமது கருத்துக்களைப் பகிர்ந்துக்கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழு சார்பில் கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு கே. மெய்யநாதன் அல்லது இரா. சந்திரமோகன், அலைபேசி இலக்கம் 0713-493415 தொடர்பு கொண்டு பெற்றுகொள்ளலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago