2025 ஜூலை 14, திங்கட்கிழமை

தோட்ட தொழிலாளர்களுக்கு முகவரியை பெற்றுக்கொடுத்த நன்நாள் இந்நாள்: வேலாயுதம்

Sudharshini   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு முகவரியை பெற்றுக்கொடுத்த நன்நாளாக இன்நாள் அமைந்துள்ளதென பொருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம்; தெரிவித்தார்.

மலையகத் தோட்ட மக்களுக்கு ஏழு பேர்ச் காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (25) பண்டாரவளை மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.  

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

200 வருடங்களாக முகவரியற்ற மக்களாக இருந்த மலைய மக்கள், நாட்டை வளமாக்கிய போதும் மலையக மக்களின் வாழ்க்கையில் எந்தவொரு மாற்றங்களும் ஏற்படுத்தப்படாது வறுமையும் சேகங்களும் தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது. இந்நிலையில் மக்களின் வாழ்க்கையில் இன்று புதிய அத்தியாயம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், முகவரியற்ற சமுகத்தில் பிறந்த நான் எனது சமுகத்துக்கு முகவரியை பெற்றுக்கொடுத்ததில் பெருமை அடைகிறேன். மேலும் எனது மக்களுக்கு சொந்த நிலத்தை பெற்றுக்கொடுத்ததில் பெரும் ஆனந்தம் அடைகிறேன்.

மேலும், 100 நாட்கள் முடிவடைந்த பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டவுடன் எவ்வாறு தோட்ட மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படும் என பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்த நிலையிலேயே தோட்ட மக்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என இராஜாங்க குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .