Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Kanagaraj / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ, மு.இராமசந்திரன், தி.தவராஜ்
முச்சக்கரவண்டியொன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி பலியானதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலப்பிட்டி தலவாக்கலை பிரதான வீதியிலேயே இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
போகவத்தையிலிருந்து மவுண்ட்வேர்ணன் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியே திம்புள்ள கோவிலுக்கு அருகாமையில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் படுங்காயமடைந்த மூவரும் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தத திம்புள்ள பத்தனை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
விபத்தில் மவுண்ட்வோர்ணன் பகுதியை சேர்ந்த 28 வயதான சிவமாயம் விமலன் என்பவரே மரணமடைந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
3 hours ago