2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி மாடுகளை கொண்டு சென்ற இருவர் கைது

Gavitha   / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ,தி.தவராஜ்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் பிரதேசத்தில் இருந்து அக்கரப்பத்தனை பசுமலை பகுதி வரை பசு மாடு இரண்டையும் கன்று குட்டி ஒன்றையும் அனுமதிபத்திரமின்றி கொண்டு சென்ற இருவரை ஹட்டன் பொலிஸார் சனிக்கிழமை (26) அதிகாலை கைது செய்துள்ளனர்.

இந்த மாடுகள் இறைச்சியாக்குவதற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன்-டயகம பிரதான வீதியில் போடைஸ் பகுதியில் வந்துகொண்டிருந்த லொறியை சந்தேகத்தின் பேரில் வழிமறித்து  சோதனை செய்தபோதே, இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும்  மாடுகளையும் லொறியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டோர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .