2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதின நிகழ்வுகள்

Kogilavani   / 2015 ஏப்ரல் 27 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதின நிகழ்வுகள் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி தோட்ட வாரியாக இடம்பெறவுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான பி.திகாம்ரபம் தலைமையில் ஹட்டனில் ஞாயிற்றுக்கிழமை(27) இடம்பெற்ற தோட்டத் தலைவர்களுக்கான கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அமைப்பாளர்கள், இணைப்பாளர்கள், மாவட்டத்தலைவர்கள் தோட்டக் கமிட்டித் தலைவர்கள் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஐம்பதாவது வருடமான பொன்விழா நிகழ்வுகள் எதிர்வரும் மே மாதம் 10 ஆம் திகதி தலவாக்கலையில் இடம்பெறவுள்ளதால் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதின நிகழ்வுகள் மே மாதம் முதலாம் திகதி தோட்ட வாரியாக அனுஷ்டிக்கப்படவுள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .