2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கூட்டுறவு சங்க சேவையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை

Sudharshini   / 2015 ஏப்ரல் 27 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

சப்ரகமுவ மாகாணத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களில் கடமையாற்றி வந்த சேவையாளர்கள் 1,583 பேருக்கு ஓய்வூதிய கொடுப்பணவு வழங்குவதுக்கு சப்ரகமுவ மாகாண கூட்டுறவுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தில் கூட்டுறவு சங்கங்களில் சேவையாற்றும் சேவையாளர்களுக்கு கொடுப்பணவு வழங்குவது குறித்து தெளிவுபடுத்தும் செயலமர்வு வெள்ளிக்கிழமை (24) பொல்கொல்ல கூட்டுறவு சங்க கேட்போர் கூட கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது.

சப்ரகமுவ மாகாண கூட்டுறவு சங்க சேவையாளர்கள் 1,583 பேருக்கு ஓய்வூதிய கொடுப்பணவுகளை வங்குவதற்காக 507 இலட்சம் ரூபாய் நிதி வைப்பு செய்யப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாண முதலமைச்சரும் மாகாண கூட்டுறவுத்துறை அமைச்சருமான மஹிபால ஹேரத், சப்ரகமுவ மாகாண உதவி பிரதான செயலாளர் கபில பெரேரா உட்பட கூட்டுறவு சேவையாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .