2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வீடொன்றிலிருந்து மான் குட்டி மீட்பு

Sudharshini   / 2015 ஏப்ரல் 29 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் எல்படை தோட்டத்திலுள்ள   வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மான் குட்டியொன்றை  நோர்வூட் பொலிஸார் இன்று (29) மீட்டுள்ளனர்.

நோர்வூட் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த சந்தேக நபரின் வீட்டை சோதனைக்குட்படுத்திய போதே, கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலிருந்த மான் குட்டியை பொலிஸார் மீட்டுள்ளனர். மேலும் குறித்த சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த மான் குட்டியை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சந்தேக நபரை ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .