Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Kogilavani / 2015 ஏப்ரல் 30 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
கண்டியிலிருந்து தலவாக்கலைக்கு டிப்பர் ரக வாகனத்தில் அனுமதிப்பத்திரமின்றி மரப்பலகைகளை கொண்டுசென்ற ஒருவரை திம்புள்ள பத்தனை பொலிஸார் நேற்று வியாழக்கிழமை(29) மாலை கைதுசெய்துள்ளதுடன் சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான பலகைகளையும் கைப்பற்றியுள்ளனர்.
நாவலப்பிட்டி தலவாக்கலை பிரதான வீதி, பத்தனை சந்தியில் வைத்து டிப்பர் லொறியை சோதனை செய்த பொலிஸார், சபு மர பலகைகள் அனுமதிப்பத்திரமின்றி கொண்டுசெல்லப்படுவதை கண்டறிந்துள்ளனர்.
இப்பலகைகள் தலவாக்கலை நகரிலுள்ள பலகை கடையொன்றுக்கு கொண்டுசெல்லப்படவிருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago
6 hours ago