2025 ஜூலை 12, சனிக்கிழமை

வடக்கு- மலையக கரப்பந்தாட்ட ஒன்றியத்தின் ஒன்றுகூடல்

Kogilavani   / 2015 ஏப்ரல் 30 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

வடக்கு- மலையக கரப்பந்தாட்ட ஓன்றியத்தின் விசேட ஒன்றுகூடல் எதிர்வரும் 3ஆம் திகதி நோரவூட் தொண்டமான் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக ஒன்றியத்தின் சொயலாளர் ஜி.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

ஒன்றியத்தின் வடக்கு பிராந்தியத்தை பிரதநிதித்துவம்படுத்தும் முக்கியஸ்தர்களும் ஒன்றியத்தின் மலையக பிராந்தியத்தை பிரதிநிதித்துவம் படுத்துபவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

சந்திப்பின் போது ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகள், விளையாட்டுத்துறையினூடாக இரு  சமூகங்களுக்கிடையிலான உறவை வளர்தல், கரப்பந்தாட்ட ஒன்றியத்துக்கான புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளல் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக ஒன்றியத்தின் சொயலாளர் மேலும் தெரிவித்தார்  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .