Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Sudharshini / 2015 மே 02 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன்,ரஞ்சித் ராஜபக்ஷ
தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் உயர்வை போராடாமல் பெற்றுக்கொடுப்பேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்;.
இ.தொ.கா. பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் மே தினக் கூட்டம் தலவாக்கலை நகர சபை மைதானத்தில் நடைப்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
ஒரு சில மலையக அரசியல்வாதிகள் 1000 ரூபாய் சம்பள உயர்வை தோட்ட தொழிலாளர்களுக்கு கொடுக்காவிட்டால், போராட்டம் செய்து அதனை பெற்றுக்கொடுக்க போவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், கடந்த காலங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிலாளர்களுக்கு ஏற்ற சம்பள தொகையை பேரம் பேசி பெற்றுக்கொடுத்துள்ளது.
அந்தவகையில் இன்றும் அதேபோல இ.தொ.கா நினைத்தால் 1000 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுக்கும். மேலும் கடந்த ஜனாதிபதி தேர்தலிலே மலையக மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதற்காக வாக்களித்து அரசாங்கத்தை மாற்றியமைத்தார்கள். ஆனால், இன்று ஆளும் கட்சியிலே 48 அமைச்சர்களும் எதிர் கட்சியிலே 157 அமைச்சர்களும் இருக்கின்றார்கள். பலம் வாய்ந்த கட்சியாக எதிர்க்; கட்சியே திகழ்கின்றது.
அரசாங்கம் எதை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் கட்சியாக எதிர்க்; கட்சியே காணப்படுகின்றது. இன்று எதிர்க்; கட்சி இல்லாமல் அரசாங்கத்தால் எந்த தீர்மானமும் எடுக்க முடியாது. 100 நாட்கள் வேலைத் திட்டத்திலே வீடுகளை கட்டி கொடுப்பதாக தற்போது இந்த அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக அரசியல்வாதிகள் பல இடங்களில் அடிக்கல் நாட்டினார்கள்.
இப்போது அடிக்கல் நாட்டிய இடங்களில் புல்தான் வளர்ந்துள்ளது. அந்த அடிக்கல்லையும் காணவில்லை வீடுகளையும் காணவில்லை. எனக்கு பின்னால் மலையக மக்கள் அணிதிரண்டு எனக்கு பலத்தை அளித்தார்கள் என்றால் நான் அவர்களுக்கு வீடு கட்டிகொடுப்பதை விட அவர்களை அத்தோட்டத்திற்கு முதலாளிமார்களாக மாற்றவேன் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இ.தொ.கா. வின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம், மாகாண அமைச்சர் ராம், ஊவா மாகாண முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான், இ.தொ.கா.வின் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ரமேஸ், சக்திவேல், பிலிப், கணபதி கனகராஜ், துரை மதியுகராஜா பிரதேச சபை உறுப்பினர்கள், இ.தொ.கா. முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
4 hours ago
4 hours ago