2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி: இருவர் காயம்

Gavitha   / 2015 மே 30 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ, மு.இராமசந்திரன்

கினிகத்ஹேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில்,  ஹட்டனிலிருந்து அவிசாவளை, கினிகத்ஹேனை களுகல, யட்டிதேரிய பகுதியில் பயணித்த கெப் ரக வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில ஒருவர் உயிரிழந்ததோடு சாரதி உட்பட மற்றுமொருவர் நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்ஹேன பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து வெள்ளிக்கிழமை (29) நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

எதிரே வந்த வாகனம் ஒன்றுக்கு இடம்கொடுக்க சென்றபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர் பலாங்கொடை வேகபிட்டிய பகுதியைச் சேர்ந்த அனுர பிரியந்த (வயது 33) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கினிகத்ஹேனை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்ஹேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .