2025 ஜூலை 03, வியாழக்கிழமை

அமைதி ஊர்வலத்துக்கு கல்வித் திணைக்களம் அனுமதி வழங்காமை வேதனைக்குரிய விடயமாகும்

Sudharshini   / 2015 மே 31 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

யாழ். புங்குடுதீவு மாணவிக்காக கடந்த வாரம் நுவரெலியாவில் ஏற்பாடுசெய்யப்பட்டடிருந்த அமைதி ஊர்வலத்துக்கு ஒத்துழைப்பு வழங்காத நுவரெலியா கல்வி திணைக்களத்தை நினைத்து நான் மிகவும் மனவருத்தம் அடைவதோடு சிறுபான்மை இனம் என்பதால் இப்படி நடந்துகொண்டர்களா? என சந்தேகம் எழுந்துள்ளது. இச்செயலை வன்மையாக கண்டிக்கின்றேன் என மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் இன்று (31) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கணடவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

இந்த நிகழ்வு தனிப்பட்ட யாருடைய அரசியலுக்காகவோ அல்லது வேறு விடயங்களுக்காகவோ ஏற்பாடு செய்யப்பட்டதல்ல. இது முழுக்க முழுக்க அந்த மாணவியின் ஆத்ம சாந்திக்காகவும் எமது மாணவர்களுக்கு ஒரு சமூக உணர்வை எற்படுத்த வேண்டும் என்பதற்காகவுமே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை ஒரு சிலர் அரசியலாகவும் ஒரு சிலர் இனவாத கண் கொண்டும் பார்த்தமையானது மிகவும் வேதனைக்குரிய ஒரு விடயமாகும்.

நுவரெலியா கல்வித் திணைக்கள அதிகாரிகள், இந்நிகழ்வில் பாடசாலைகளை கலந்துகொள்ள வேண்டாம் என அறிவித்தல் விடுத்திருந்தது. நுவரெலியா நகர வர்த்தகர்கள் அனைவரும் இன மத மொழிக்கு அப்பாற்பட்டு தமது வர்த்தக நிலையங்களை மூடி எமக்கு ஆதரவு தந்தார்கள். ஆனால், ஆதரவு வழங்க வேண்டிய பாடசாலை சமூகம் பின்னின்றதன் காரணம் புரியவில்லை.

நாம் எமது சமூக ரீதியான செயற்பாடுகளில் இப்படி பின்னின்று செயற்படுவதால்தான் எமது சமூகம் இன்னும் பின்தங்கி நிற்கின்றது. எனவே, எதிர்வரும் காலங்களிலாவது கொஞ்சமேனும் சமூக உணர்வோடு செயற்படுவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

இந்நிகழ்வில் மாணவர்களை கலந்துகொள்ள செய்தால் அது பிரச்சினையை ஏற்படுத்தும் என கல்வி திணைக்கள அதிகாரிகள் கூறிய காரணம் கூறியுள்ளார்கள்;. அப்படியானால் வசந்த காலத்தின் முதல் நாள் அன்றும், வேறு நிகழ்வுகளுக்கும் மாணவர்களை அனுப்ப முடியுமானால் ஏன் இந்நிகழ்வுக்கு அனுப்ப முடியாது என்பதே எனது கேள்வியாகும்?

உணர்வில்லாத ஒரு சமூகமாக இந்த மாணவர்களை வளர்;தெடுக்க வேண்டாம் என உங்களை அன்பாக வேண்டிக்கொள்கின்றேன். இதற்கு துணை போகின்ற அதிகாரிகளையும் ஆசிரியர்களையும் உங்கள் மன சிந்தனையை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். இந்த அமைதி பேரணியில் கலந்துகொண்ட அனைவருக்கும் எனது உணர்வுபூர்வமான நன்றிகளையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் என அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .