2025 ஜூலை 02, புதன்கிழமை

புதிய கூட்டணிக்கு அழைப்பில்லை

Kogilavani   / 2015 ஜூன் 03 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிததாக உதயமாகவுள்ள மலையக கூட்டணியில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தால் அதுதொடர்பில் பரிசீலனை செய்திருக்கலாமென மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.உதயகுமார், நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 'சிறுபான்மையிலும் சிறுபான்மை மக்களாக மலையக மக்களே உள்ளனர். இவர்களுக்காக குரல்கொடுக்கும் மக்கள் பிரதிநிதிகள் தலைமையில் பல்வேறு கூட்டணிகள், தொழிற்சங்கங்கள் காணப்பட்டாலும் அவை தேர்தல் நோக்கு கூட்டணிகளாகவும் அரசியல் இலாபத்தை கருத்தில் கொண்டதாகவுமே உள்ளன' என்றார்.

'மலையக மக்களுக்கு நன்மை பயக்கும் ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளை நாங்கள் வரவேற்கின்றோம். மலையக மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் எம்மிடம் எந்த கலந்தாலோசிப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை. அறிவிப்பு வந்திருந்தால் அதுதொடர்பில் ஆராய்ந்;து பார்த்திருக்கலாம்' என அவர் மேலும் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .