2025 ஜூலை 02, புதன்கிழமை

கொட்டகலையில் 3 கடைகளில் கொள்ளை

Kogilavani   / 2015 ஜூன் 03 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

பத்தனை, கொட்டக்கலை நகரில், திங்கட்கிழமை (01) இரவு மூன்று கடைகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பால்மா பக்கெட்டுக்கள் உட்பட பெறுமதிவாய்ந்த பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொட்டக்கலை, ரொசிட்டா வீதிக்கு அருகிலுள்ள பலசரக்கு கடை,  தொடர்புசாதன கடை மற்றும் கொட்டக்கலை தனியார் வங்கியொன்றுக்கு அருகிலுள் பலசரக்கு கடை ஆகியவற்றிலேயே இக்கொள்ளைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த இருவாரங்களில் இவ்வாறு 10 கடைகளுக்கு மேல் கொள்ளையிடப்பட்டுள்ளதாக குறித்த பகுதியிலுள்ள வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது நடைபெற்ற கொள்ளைச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஆனால், இதற்கு முன்னர் நடைபெற்ற கொள்ளை சம்பவங்கள் குறித்து தமக்கு முறையிடப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .