Kogilavani / 2015 ஜூன் 03 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரவிந்தர விராஜ் அபேசிறி
பொசன் பௌர்ணமி தினத்தையொட்டி நேற்று செவ்வாய்க்கிழமை (02) மாத்தளையில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு தானசாலைகளை நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மாத்தளை மாநகர சபையின் சுகாதார பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே மேற்படி இரு தானசாலைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேலும் 5 தானசாலைகளில் காணப்பட்ட குறைபாடுகள் நிவர்த்திசெய்யப்பட்டு அவை தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டது.
மாத்தளை மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் 45 தானசாலைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



37 minute ago
44 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
44 minute ago
55 minute ago