2025 ஜூலை 02, புதன்கிழமை

குடும்பக்கொலை: வழக்கு விசாரணைக்கு ஏற்பு

Kogilavani   / 2015 ஜூன் 03 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய், தந்தை மற்றும் சகோதரி ஆகிய மூவரையும் குளிர்பானத்தில் விசம் கலந்து கொலை செய்த இளைஞனுக்கு (மகன்) எதிரான வழக்கை எதிர்வரும் 19ஆம் திகதி விசாரணை எடுத்துகொள்வதற்கு கொழும்பு உயர் நீதிமன்றத்தின் நீதிபதி அயிராங்கனி பெரேரா தீர்மானித்தார் .

வெள்ளவத்தை தொடர்மாடிக் கட்டிடம் ஒன்றில் கடந்த 2012ஆம் ஆண்டு    உணவில் விசம் கலந்து கொடுத்து தன் தந்தையான குமாரசாமி, ஐயப்பன் பூமதி (தாய்) மற்றும் அனிதா பிரியா (சகோதரி) ஆகிய மூவரையும் கொலைச்செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் ஹட்டன்- கொட்டக்கலை க்ளையார் தோட்டத்தில் வசித்த அவர்களது மகனான குமாரசாமி பிரசாந் என்பவர் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் நீண்டகாலமாக சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

சந்தேகநபர் உயர் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு அமைய 25,000 ரொக்கப்பிணையிலும்  5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையிலும் விடுதலை செய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .