Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Administrator / 2015 ஜூலை 10 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி ஹட்டன் பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சேவை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இன்று வெள்ளிக்கிழமை(10) அதிகாலை முதல் இச்சேவை நிறுத்தம் இடம்பெற்று வருவதால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை(19) காலை 9.20 மணிக்கு கண்டி பஸ் தரிப்பிடத்தில் பயணிகளை எற்றுவதற்காக குறித்த நேர சேவைக்கான தனியார் பஸ், சுமார் 15 நிமிடங்களுக்கு முன்னாள் காலை 09.05 மணியளவில் பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
அதனையடுத்து மத்திய மாகாண போக்குவரத்து அதிகார சபையினால் 3,000 ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த சேவை நிறுத்தம் முன்னெடுக்கபடுவதாக பஸ் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்
மேலும் கண்டி பஸ் தரிப்பிடத்தில் சேவையில் ஈடுபடும் பஸ், குறித்த நேரத்திலேயே பஸ் தரிப்பிடத்தில் தரித்து பயணிகளை ஏற்ற முடியும் சேவை நேரத்தை தவிர்ந்த நேரத்தில் பஸ் வண்டிகள் பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தமுடியாது என பஸ் தரிப்பிட அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டுள்ளது
எனினும் ஹட்டன் - கண்டி மார்க்கத்தில் சேவையில் ஈடுபடும் குறிப்பிட்ட ஒரு தனியார் பஸ் வண்டி மாத்திரம் சேவை நேரம் தவிந்த நேரத்திலும் நிறுத்துவதற்கு அனுமதிக்கப்படுவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
59 minute ago
1 hours ago