Sudharshini / 2015 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
'நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மலையக மக்கள், தனிமனித அதிகாரத்துக்கு எதிராகவும் கூட்டமைப்பு கலாசாரத்துக்கு ஆதரவாகவும் தங்களது வாக்கைப் பயன்படுத்தியுள்ளனர்' என மலையக அரசியல் விழிப்புணர்வு கழகத்தின் நிறைவேற்று செயலாளர் ஜீவன் இராஜேந்திரன் தெரிவித்தார்.
நல்லாட்;சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் உப-தலைவர்களான பழனி திகாம்பரம், வீ.இராகிருஷ்ணன் மற்றும் கூட்டணியின் உறுப்பின் மயில்வாகனம் திலகராஜ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவ்வறிக்கையில்; மேலும் கூறியுள்ளதாவது,
'வெற்றிப்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களின் தேவைகளை இனங்கண்டு தகுந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போதுதான் வெற்றிக்கான முழுமையான மகிழ்ச்சியை அடைய முடியும்.
'சமூக நலன் சார்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்கும் குழுவாகவும் அவர்களின் நேர்மையான நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்கும் தோழனாகவும் மலையக அரசியல் விழிப்புணர்வு கழகம் செயற்படும்' என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
42 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
47 minute ago