2025 டிசெம்பர் 29, திங்கட்கிழமை

21 ஆலயங்களுக்கு சென்றவர் கைது

Editorial   / 2023 ஒக்டோபர் 23 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்குச் சொந்தமான 21 இந்து ஆலயங்களுக்குள் நுழைந்து  கொள்ளையடித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரால்,  கொள்ளையடித்து தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது

  நுவரெலியா பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (22) கைது செய்யப்பட்ட சந்தேநபர்,  நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஞாயிற்றுக்கிழமை (23)  ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நவம்பர் 3ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு  நுவரெலியா நீதவான் திருமதி குஷிகா குமாரசிறி உத்தரவிட்டார்.

நுவரெலியா அம்பேவெல வத்த பொரகாஸ் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி ரகுநாதன் (வயது 43) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

திருடப்பட்ட தங்கப் பொருட்களை கொள்வனவு செய்த தலவாக்கலை பிரதேசத்தை சேர்ந்த இருவரும்  கைது செய்யப்பட்டு சந்தேக நபருடன் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

பிரதான சந்தேகநபரிடமிருந்து தங்கப் பொருட்களை கொள்வனவு செய்த இருவரையும் தலா இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபர்கள் இருவரையும் நவம்பர் 3ஆம் திகதிநீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

  பாதுகாப்பு கமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணைகளை மேற்கொண்ட நுவரெலியா பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், பிரதான சந்தேக நபரைக் கைது செய்தனர்.பிரதான சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை, ராகலை, ஹைஃபோரஸ்ட், லிதுல, ஹட்டன், பொகவந்தலாவ, நானுஓயா, உடப்புஸ்ஸல்லாவ, வெலிமடை, கெப்பட்டிபொல, மாத்தளை, கம்பளை, நாவலப்பிட்டி ஆகிய பொலிஸ் எல்லைக்குட்பட்ட 21 இந்து ஆலயங்களில் சந்தேக நபர் புகுந்து கொள்ளையடித்துள்ளார். மற்றும் பணம் மற்றும் தங்க நகைகள் திருடியுள்ளார் என்பதும்  பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X