2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

23 வருடங்களின் பின்னர் ரயிலில் வருகிறது மரக்கறி

Freelancer   / 2022 டிசெம்பர் 29 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

கொழும்பு, கோட்டைக்கு ரயில்களின் ஊடாக மரக்கறிகளை கொண்டுவரும் செயற்பாடுகள் 23 வருடங்களின் பின்னர் செவ்வாய்க்கிழமை (27) ஆரம்பிக்கப்பட்டது. 
இந்த திட்டத்தை அகில இலங்கை பொருளாதார மத்திய நிலைய சங்கம், நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி ஆரம்பித்து வைத்தார். 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில், முன்வைத்த இடைக்கால வரவு- செலவுத் திட்ட யோசனையின் ஊடாக, ரயில் திணைக்களத்தின் விற்பனை மற்றும் விநியோக பிரிவின் ஊடாக, ரயில்களில் மரக்கறிகளை ஏற்றி இறக்குவதற்கு விசேட கூடங்கள் நிர்மாணிக்கப்பட்டன. 

அதனடிப்படையிலேயே, நானுஓயா ரயில் நிலையத்தில் இருந்து தனது முதலாவது பயணம், செவ்வாய்க்கிழமை (27) மாலை 5 மணிக்கு ஆரம்பித்துவைக்கப்பட்டது. 
 
கொழும்பில் உள்ள சுப்பர் மார்க்கெட் மற்றும் மெனிங் சந்தைக்கு தேவையான மரக்கறி சரக்குகள் அந்த ரயிலில் கொண்டு செல்லப்பட்டாலும், அந்த ரயிலில் பயணிகள், பயணிக்க வாய்ப்பில்லை என ரயில்வே திணைக்களத்தின் வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் திரு.அசங்க சமரசிஹா தெரிவித்தார்.

 இதன்மூலம் நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் எனவும், இத்திட்டத்தின் குறைபாடுகளை ஆராய்ந்து அடுத்த வருடம் முதல் மாதம் முதல் ரயில் சேவை தொடரும் எனவும் பிரதி ஆணையாளர் தெரிவித்தார்.

மலையகப் பகுதிகளில் விளையும் காய்கறிகள், பூக்கள் மற்றும் பழங்கள் நுவரெலியாவைத் தவிர, பண்டாரவளை மற்றும் வெலிமடை பகுதிகளில் விளைவிக்கப்படும் மரக்கறிகள், பழங்கள் மற்றும் பூக்கள், நானுஓயா ரயில் நிலையத்தில் இருந்து கொண்டு செல்ல எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து ரயில் நிலையங்களுக்கும் இந்த ரயிலின் ஊடாக, பூக்கள் மற்றும் மரக்கறிகளை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என நானுஓயா ரயில் நிலையத்தின் நிலைய அதிபர்  ஜனக விரசிங்க தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .