2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

24 வயதான யுவதியை வீட்டிலேயே கொன்றது கொரோனா

Editorial   / 2021 ஜூன் 01 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோன தொற்றுக்கு உள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை 1,484ஆக அதிகரித்துள்ளது என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே. மாதம் 31ஆம் திகதியன்று கொரோனா மரணங்கள் நான்கு பதிவாகியுள்ளன என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.

மே மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை கொரோனா தொற்றாளர்கள், 39 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரத்தோட்டை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 24 வயதான யுவதி, 2021 மே 27 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் டவுன்ஸ் சின்ட்ரோம் நிலைமையே மரணத்துக்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

 

மே 20 ஆம் திகதி 06 மரணங்கள்

மே 21 ஆம்  திகதி ஒரு மரணம்,

மே 24 ஆம் திகதி ஒரு மரணம்

மே 25 ஆம் திகதி 02 மரணங்கள்

மே 26 ஆம் திகதி 02 மரணங்கள்

மே 27 ஆம் திகதி 06 மரணங்கள்

மே 28 ஆம் திகதி 09 மரணங்கள்

மே 29 ஆம் திகதி 06 மரணங்கள்

மே 30 ஆம் திகதி 06 மரணங்கள் இடம்பெறுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X