2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

’250 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் விநியோகம்’

Editorial   / 2018 மே 28 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

இலங்கை முஸ்லிம்களுக்காக, சவூதி அரேபிய அரசாங்கத்தால் வருடாவருடம் வழங்கப்படும் பேரீச்சம்பழங்கள் இம்முறை தாமதமாகியதன் காரணமாக, அமைச்சரவையின் அங்கிகாரத்துடன், 80 மில்லியன் ரூபாய் செலவில் 250 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள், முஸ்லிம்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளனவென, தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.

கண்டியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இப்தார் நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரைத்த அவர் மேலும் கூறுகையில், சவூதி அரேபிய அரசாங்கம், வருடாவருடம் இலங்கை முஸ்லிம்களுக்காக பேரீச்சம்பழங்களை வழங்குவது வழக்கமென்ற போதிலும், இம்முறை அது தாமதமாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.

எனவே, முஸ்லிம் சமய விவகார அமைச்சர் என்ற அடிப்படையில், தான் அமைச்சரவைக்குச் சமர்பித்த வேண்டுகளின் அடிப்படையில், பிரதமரின்​ உதவியுடன் 80 மில்லியன் ரூபாய் செலவில் 250 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன எனவும், பேரீச்சம்பழங்களை, சதொச விற்பனை நிலையங்களுக்கூடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

சவூதி அரேபிய அரசாங்கத்தால் அனுப்பப்பட்டுள்ள பேரீச்சம்பழங்கள், இன்று (29) கிடைக்குமென்று கூறிய அவர், அந்தப் பேரீச்சம்பழங்களை, சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X