Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Janu / 2023 செப்டெம்பர் 06 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த பல்துறை பயிற்சி உதவியாளர்கள் 418 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவின் திசாநாயக்க தலைமையில் சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (06 இடம்பெற்றது.
2020 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் பல்துறை பயிற்சி உதவியாளர்கள் 34,700 பேர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். இதில் சப்ரகமுவ மாகாணத்தில் 4679 பேர் பல்துறை பயிற்சி உதவியாளர்களாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டன. இதில் 1050 பேரின் நியமனங்கள் பல்வேறு காரணங்களால் இடை நிறுத்தப்பட்டன.
சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் பல்துறை பயிற்சி உதவியாளர்கள் 830 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் முதற்கட்டமாக இரத்தினபுரி மாவட்டத்தில் 418 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. இதை தவிர சப்ரகமுவ மாகாணத்தில் மேலும் பல்துறை பயிற்சி உதவியாளர்கள் 2729 பேருக்கு விரைவில் நிரந்தர நியமனம் வழங்கப்பட உள்ளமை குறிப்பித்தக்கது.
சிவாணி ஸ்ரீ
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago