2024 மே 02, வியாழக்கிழமை

5 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்; பகுதி நேர ஆசிரியருக்கு கடூழிய சிறை

Freelancer   / 2024 மார்ச் 06 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட  ஒருவருக்கு 12 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து, நுவரெலியா மேல் நீதிமன்ற  நீதவான் விராஜ் வீரசூரிய நேற்று (05) தீர்ப்பளித்துள்ளார்.

நேட்டன்பிரிஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளவட்டன் பகுதியை சேர்ந்தவருக்கே இவ்வாறு கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2010 ஆண்டு ஜனவரி மாத காலப்பகுதியில் கிளவட்டன் பகுதி பாடசாலை ஒன்றில் பகுதிநேர ஆசிரியராக கடமையாற்றிய இராஜரட்ணம் கேதீஸ்வரன் என்பவர் தரம் ஐந்தில் கல்வி கற்ற சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் கடந்த 14 வருடங்களாக விசாரிக்கப்பட்ட நிலையில்  வழங்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில்  இந்த பகுதி நேர ஆசிரியர் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நிலையில் இவருக்கு கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டது.

அத்துடன் குற்றவாளியாக இனங்காணப்பட்டவர், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் இத் தொகை வழங்காவிட்டால் மேலும் 2 வருட சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி அறிவித்தார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .