2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

52 இலட்சத்துக்கு வழங்கினால் இவர்களுக்கு வழங்க முடியாதா?’

Editorial   / 2020 மே 18 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.கணேசன்

அரசாங்கம், சுமார் 52 இலட்சம் குடும்பங்களுக்கு 5,000 ரூபாய் நிதியுதவியை வழங்கியுள்ளதாக கூறியுள்ள நிலையில், ஒன்றரை இலட்சம் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏன் வழங்கமுடியவில்லை என, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா வேட்பாளர்கள் கலந்துகொள்ளும் ஊடகவியலாளர் சந்திப்பு, நுவரெலியாவிலுள்ள கன்ட்ரி ஹவுஸ் விருந்தகத்தில், இன்று (18) நடைபெற்றது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இன்று அரசாங்கம் பல்வேறு நிவாரணங்களை வழங்கினாலும், அவை தோட்ட தொழிலாளர்களுக்கு முறையாக கிடைப்பதில்லை என்று குற்றஞ்சாட்டிய அவர். இன்று நாட்டில் அனைத்து துறைகளும் முடக்கப்பட்டுள்ள நிலையில், தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரமே அந்நிய செலவாணியை பெற்றுக் கொடுப்பதற்காக தொடர்ந்தும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூறினார்.  

அண்மைய செய்திகளின் அடிப்படையில், உலக சந்தையில் தேயிலையின் விலை வெகுவாக அதிகரித்துள்ளதாக கூறப்படுவதாகவும ஆனால் அந்த விலை அதிகரிப்பினுடைய பிரதிபலன் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை என்றும் கூறினார்.

எனவே, அரசாங்கம் திட்டமிட்ட அடிப்படையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களை ஒதுக்குவதாகவே இதை கருத முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .