2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

6 மாத சிசுவின் சடலம் மீட்பு

Editorial   / 2022 ஜூன் 10 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  நாகசேனை வலகா தோட்டத்துக்கு செல்லும் பிரதான வீதியில் ஆறுமாதம் குறிப்பிடத்தக்க சிசுவின் சடலம் இன்று (10) காலை 11 மணிக்கு லிந்துலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பாதையின் ஊடாக சென்ற நபர்கள் சிசுவொன்று இறந்து கிடப்பதை அவதானித்து அது தொடர்பாக லிந்துலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர் இதனையடுத்து பொலிஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.

இறந்த சிசு யாருடையது  என்பது தொடர்பான தகவல் இதுவரை தெரியவில்லை இறந்த சடலத்தை  நுவரெலியா மாவட்ட நீதவான் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாக தெரிவித்த  லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X