2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

6 மாவட்டங்களில் அனர்த்தம்: 1,590 பேர் பாதிப்பு

Freelancer   / 2022 நவம்பர் 10 , பி.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தில் ஆறு மாவட்டங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால், 396 குடும்பங்களைச் சேர்ந்த 1,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

வௌ்ளம், மண்சரிவு, பாரிய கற்கள் புரண்டு விழுதல், மரங்கள் முறிந்து விழுந்தமை ஆகிய இயற்கை அனர்த்தங்களுக்குள் சிக்கி இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மத்திய நிலையத்தின் புள்ளிவிபரத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வனர்த்தங்களுக்குள் சிக்கி அறுவர் உயிரிழந்துள்ளனர் மற்றும் இருவர் காணாமல் போகியுள்ளனர். அத்துடன், 174 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

நாடளாவிய ரீதியில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்குமென தெரிவித்துள்ள வானிலை அவதான நிலையம், மழைக்காலங்களில் கூடுமானவரை விழிப்பாக இருக்குமாறும் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .