2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

7 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் எச்சரிக்கை

R.Maheshwary   / 2022 நவம்பர் 07 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை, கேகாலை, கண்டி, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தேசியக் கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கண்டி மாவட்டத்தின் கங்கவட்ட கோரள பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், தேசியக் கட்டட ஆய்வு நிலையத்தின் மறு அறிவிப்பு விடுக்கப்படும் வரை, மண்மேடு சரிந்து விழுதல் மற்றும் மண்சரிவு எச்சரிக்கை குறித்து அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்துக்கு கடந்த 24 மணிநேரத்துக்குள் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது என்றும் இந்தப் பகுதிகளில் மிகவும் ஆபத்தான பகுதிகளிலிருந்து மக்களை அப்புறப்படுத்துவதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .