Editorial / 2021 ஜூன் 02 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி-பல்லேகல பகுதியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்லேகல முதலீட்டு ஊக்குவிடப்பு வலயத்திலுள்ள ஆடைக் கைத்தொழில் சாலையில் கடமையாற்றும் பணியாளர்களில் 74 பேர் திடீரென சுகயீனமடைந்துள்ளனர்.
இதனையடுத்தே இவ்வாறான பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
வாந்தி மற்றும் தலைவலி காரணமாகவே இவர்கள், மெனிக்ஹின்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சுகவீன மடைந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளது. எனினும், தடுப்பூசிக்கும் இவ்வாறு நோய்வாய்ப்பட்டதற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லையென மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிஹால் வீரசூரிய தெரிவித்தார்.



30 minute ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
5 hours ago
9 hours ago