2025 மே 16, வெள்ளிக்கிழமை

8 வருடங்களின் பின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

R.Maheshwary   / 2023 ஜனவரி 04 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ்  கீர்த்திரத்ன

கடந்த 8 வருடங்களாக இடைநடுவில் கைவிடப்பட்ட மாத்தளை பேர்னாட் அலுவிஹார விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு பணிகள் இன்று (4) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

50 மில்லியன் ரூபாய் செலவில், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்கவின் தலைமையில்   இந்த அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

கடந்த நல்லாட்சி காலத்தில் குறித்த மைதானத்தை  புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அது பூர்த்தி செய்யப்படவில்லை. இதனால்  மாத்தளை மாவட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர்கள், பாடசாலை மற்றும்  விளையாட்டுச் சங்கங்களின் விளையாட்டு வீரர்கள் தமது பயிற்சிகளை முன்னெடுக்க முடியாமல் பாரிய சிரமங்களை எதிர்நோக்கினர்.

இந்த நிலையில், தற்போதை விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் தலைமையில் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், இதில் மாத்தளை நகர மேயர் எஸ்.பிரகாஸ், நகர ஆணையாளர் எம்.யூ. நிசாந்த உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .