R.Maheshwary / 2023 பெப்ரவரி 19 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். கே. குமார்
நுவரெலியா -பதுளை வீதியில் ஹக்கல பகுதியில் இன்று (19) அதிகாலை எரிபொருள் (சிபேட்கோ) பௌசர் விபத்துக்குள்ளானதில் அதன் சாரதியும் உதவியாளரும் காயமடைந்துள்ளனர்.
கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து - கெப்பட்டிபொல எரிபொருள் நிலையத்திற்கு டீசல் ஏற்றிச் சென்ற பௌசரே ஹக்கல பூங்கா பகுதியில் சுமார் 80 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
சீரற்ற வானிலையால் சாரதியின் கட்டுப்பாட்டை மீறி வாகனம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த பௌசரில் 13,200 லீற்றர் டீசல் இருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் குறித்த பௌசர் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன்,மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


11 minute ago
29 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
29 minute ago
5 hours ago