Editorial / 2020 ஏப்ரல் 23 , பி.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றத்தை மீளக் கூட்ட மாட்டோம் என அடம்பிடிப்பது விதண்டாவாதமாகும் எனத் தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார், தற்போதையச் சூழலில், நீதித்துறையின் ஆலோசனைகளைப் பெற முடியாது என்பதால், உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், நாடாளுமன்றம் மீளக் கூட்டப்படுமானால், அதனை ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை முன்னெடுத்துச் செல்லக்கூடிய இயலுமை காணப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தற்போதைய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுப் பெருபான்மை பலத்தைப் பெற்று, அதனைத் தொடர்ந்தும் ஆறு வருடங்களுக்கு நடத்திச் செல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பங்கள் இருக்கும் போது, நாடாளுமன்றத்தை மீளக் கூட்ட மாட்டோம் என அடம்பிடிப்பது விதண்டாவாதமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தன்னால் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டப்போவதில்லை என ஜனாதிபதி விடாப்பிடியாக இருப்பது ஜனநாயக பண்புகளுக்கு முற்றிலும் விரோதமானது எனவும் அரவிந்தகுமார் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
25 minute ago
34 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
34 minute ago
2 hours ago
2 hours ago