Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
R.Maheshwary / 2022 நவம்பர் 07 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
மலையக மக்களின் அடையாளம் கருதி, அடுத்த தேர்தலில் மலையக அரசியல் அரங்கம் போட்டியிடக்கூடிய சாத்தியம் உள்ளதென அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், நுவரெலியா மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். திலகராஜ் தெரிவித்தார்.
அடுத்த தேர்தலில் மலையக அரசியல் அரங்கம் நிச்சயம் போட்டியிடும். உள்ளூராட்சி, மாகாண மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிடுமென தெரிவித்த அவர், ஏன் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றால்கூட அடையாளம் கருதி களமிறங்குவோம். வெற்றி, தோல்வியைவிட எமது மக்களின் அடையாளத்துக்காக போட்டியிடலாம். இளைஞர், யுவதிகளுடன் கைகோர்த்து அடுத்த தலைமுறைக்கான அரசியலை முன்னெடுப்போம் என்றார்.
ஹட்டனில் நேற்று (6) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
மலையக கட்சிகளின் இணைவு என்பது இப்போதைய தலைமுறைக்கு புதிய விடயமாக இருந்தாலும், எனது அரசியல் பயணத்தில் இதற்கு முன்னர் ஒற்றுமைகளை பல தடவைகள் பார்த்துள்ளேன். 1999இல் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மயில் சின்னத்தில்தான் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிட்டது. இந்திய வம்வாவளி மக்கள் பேரணி என பெயரும் இடப்பட்டது. தற்போதை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கூட அந்த சின்னத்தில்தான் போட்டியிட்டு அரசியல் அறிமுகம் பெற்றார்.
99 இல் ஏற்பட்ட இந்த ஒற்றுமைக்கு 2009 இல் என்ன நடந்தது என்பது எமக்கு தெரியும். அதேப்போல் 2001 ஆம் ஆண்டு மல்லியப்பு சந்தியில் ஆறுமுகன் தொண்டமானும், சந்திரசேகரனும் ஒன்றிணைந்தார்கள். இரு துருவங்கள் இணைவு என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. தற்போது 2022 இல் இணைவு நடைபெறும்போது தற்போதைய மலையக மக்கள் முன்னணியில் தலைவர் எப்படியான கருத்தை வெளியிட்டுவருகின்றார் என்பது மக்களுக்கு புரியும்.
இந்த ஒற்றுமை மக்கள் நலன் சார்ந்ததாக இருந்திருந்தால், விழாவுக்கு அழைத்து விருந்தினராக மாமன், மச்சான், தந்தை, மகன் என உறவு கொள்வதால் மக்களுக்கு எதுவும் நடக்கப்போவதில்லை. ஒரு வேலைத்திட்டம் முன்வைக்கப்பட்டு நடவடிக்கை இடம்பெறவேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 May 2025
17 May 2025