Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 செப்டெம்பர் 14 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
நிர்ணய விலையை மாற்றி, அதிக விலைக்கு மருந்துப்பொருள்களை விற்பனை செய்த மருந்தகம் ஒன்றின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நபரிடம் ஒன்றரை இலட்ச ரூபாய் அபராதட விதிக்கப்பட்டுள்ளது என, பதுளை சுகாதார சேவைகள் பணிப்பகத்தின் உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர் ஜே. சமரஜீவ தெரிவித்தார்.
பண்டாரவளை பிரதேசத்தில் அதிக விலைக்கு மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக பதுளை சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற பொதுமக்கள் முறைப்பாடுகளுக்கு அமைய, பண்டாரவளை நகரில் சோதனைகள் நடத்தப்பட்டன.
இதன்போது, பண்டாரவளை நகரில் உள்ள மருந்தகம் ஒன்றில், அதிக விலைக்கு மற்றும் விலைக் கட்டுப்பாட்டுக்கு உட்படாத பல வகையான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், விலை மாற்றப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படும் வேளையில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். .
2 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago