2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

அதிகாரி மீது தாக்குதல்; ஐந்து இளைஞர்கள் விளக்கமறியலில்

R.Maheshwary   / 2022 மே 03 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

ஹட்டன் மின்சார நுகர்வோர் சேவை மத்திய நிலையத்தின் அதிகாரியொருவர் மீது தாக்குதல் நடத்திய 5 இளைஞர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன் – செனன் தோட்டத்தைச் சேர்ந்த 20- 25 வயதுக்குட்பட்ட ஐந்து இளைஞர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி செனன் பகுதியில் அத்தோட்ட இளைஞர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், குறித்த அதிகாரி கடமை நிமித்தம் தனது வாகனத்தில் அவ்வீதியூடாக பயணித்துள்ளார்.

இதன்போது, மதுபோதையில் இருந்த இளைஞர்கள் சிலர், குறித்த அதிகாரியைத் தாக்கி அவரது வாகனத்தின் சாவியையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் அதிகாரி முறைப்பாடு செய்துள்ளதுடன், அவர் கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சந்தேகநபர்களை கைதுசெய்த ஹட்டன் பொலிஸார், அவர்களை ஹட்டன் நீதவான் பரீட் டீன் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து. சந்தேகநபர்களை இந்த மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X