Janu / 2024 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேயிலை கொழுந்துகள் திருடப்பட்டுள்ளதாக கூறி தலவாக்கலை தோட்ட அதிகாரி ஒருவர் தொழிலாளி ஒருவரை கடந்த செவ்வாய்க்கிழமை (30) மாலை தாக்கியுள்ளார் .
இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த அதிகாரியை இடமாற்றம் செய்யுமாறு கோரியும் , தோட்டத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை (31) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் .
தாக்குதலுக்குள்ளான தொழிலாளி , இது தொடர்பில் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் அவர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் .
சம்பவத்துடன் தொடர்புடைய தோட்ட அதிகாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர் .
பி.கேதீஸ்

7 minute ago
25 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
25 minute ago
27 minute ago