Editorial / 2019 மார்ச் 19 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், செ.தி.பெருமாள்
மஸ்கெலியா சமனெலிய சிங்களப் பாடசாலையில், தற்போது பணிப்புரியும் அதிபர் தங்களுக்கு வேண்டாம் எனக் கோரி, பாடசாலை மாணவர்களின் பெற்றோரால், இன்று (19), ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்ட பெற்றோர் பங்கேற்றிருந்தனர். கடந்த 8 நாள்களாக, பாடசாலையின் அதிபர் பாடசாலைக்கு வருகை தரவில்லை என்றும் இப்பாடசாலைக்கு அதிபர் வருகைதந்தக் காலம் தொட்டு, பாடசாலைக்கு எந்தவிதமான அபிவிருத்தியும் செய்துகொடுக்கப்படவில்லை என்றும், பெற்றோரால் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
பாடசாலைக் கற்றல் நடவடிக்கையும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதாகத் தெரிவித்த பெற்றோர், இதனால், தங்களது பிள்ளைகள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது இல்லை என்றும் தெரிவித்தனர்.
எனவே, வலயப் பணிப்பாளர் முன்வந்து, தற்போதுள்ள அதிபரை இடமாற்றிவிட்டு, வேறொரு நல்ல அதிபரை நியமிக்குமாறு, கோரிக்கை விடுத்தனர்.

33 minute ago
33 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
33 minute ago
1 hours ago
1 hours ago