2025 மே 17, சனிக்கிழமை

அனைத்து அரசாங்கங்களும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கின்றது

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 20 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

ஆட்சிக்கு வரும் எந்தவோர் அரசாங்கமும் தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை என தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார்,    அனைத்து அரசாங்கங்களும் தொழிலாளர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நோக்குகிறது என்றார்.

ஹட்டன் கல்வி வலயத்தின் கீழுள்ள  பாடசாலைகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் அதனைத் தீர்ப்பது தொடர்பிலும் பாடசாலை அதிபர்களுடன் ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

தோட்டத் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ள நிலையில் அவர்களின் பிள்ளைகள் போசாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையிலிருந்து பிள்ளைகளை மீட்டெடுத்து,தோட்டத் ​தொழிலாளர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தி வாழ்வாதார செலவைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அத்துடன் நாட்டின் தற்போதைய நிலையில், தோட்டப் பாடசாலைகளுக்கு வருகைத் தரும் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது என்றார்.

நாட்டின் பொருளாதாரம் பாரிய பின்னடைவில் இருக்கும் போது, பாரிய நிதியை செலவழித்து தேர்தலை நடத்துவது பொருத்தமற்ற செயற்பாடு என்றார்.

தனக்கு தெரிந்த வரையில் விரைவில் ​தேர்தல் ஒன்று நடைபெறாது என்றும் அதற்காக அரசாங்கத்தில் இருக்கும் எவரும் தயார் இல்லை என்றார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .