R.Maheshwary / 2023 பெப்ரவரி 15 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
நாட்டின் பல ஜனாதிபதிகளை உருவாக்கிய ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலேயே அபிவிருத்திப் பணிகளை நிறைவு செய்ய முடியாமல் இருக்கும் போது, ஒரேயொரு அமைச்சுப் பதவியை வைத்துக்கொண்டு மலையகத்தில் அபிவிருத்திப் பணிகளை முடிக்க முடியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
மஸ்கெலியா கவரவில மற்றும் மானெலி ஆகிய தோட்டங்களில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் முகமாக நேற்று (14) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அரச சொத்துக்களை விற்று நாட்டுக்கு டொலரை வழங்கும் நோக்குடன் யாராவது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வந்து, சகல தேயிலைத் தோட்டங்களையும் தனக்கு வழங்குமாறும் அதனூடாக அதிக முதலீடு செய்யலாம் என கோரினால் நாட்டின் ஆட்சியாளர்கள் அதற்கு ஏற்பாடு செய்வார்கள் என்றார்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் பெருந்தோட்ட மக்களுக்காக குரல் கொடுக்க தமது கட்சி அரசியல் ரீதியாக வலுப்பெற வேண்டுமெனவும், அதற்காக பெருந்தோட்ட மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
12 minute ago
30 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
30 minute ago
5 hours ago