2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அப்படி திரிந்தவர் அதிரடியாக கைது

Freelancer   / 2022 ஒக்டோபர் 28 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன 

​ஹெரோய்ன் மற்றும் போதையூட்டும் குளிசைகளை தம்வசம் வைத்துக்கொண்டு நகரத்தில் அங்குமிங்கும் சுற்றித்திருந்த 21 வயதான இளைஞனை அலதெனிய பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றிதிரிவதை அவதானித்த பொலிஸார், அவரை விசாரணைக்கு உட்படுத்தியபோது, உடலில் மறைத்து வைத்திருந்த 2,340 மில்லிகிராம் ஹெரோய்ன், கெபிக்கா என்றழைக்கப்படும் 346 குளிசைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

போதையூட்டும் இந்த குளிசைகள் பாடசாலை மாணவர்களுக்கு ஆகக் கூடுதலான விலைக்கு விற்பனை செய்யும் வகையிலேயே அவர், மறைத்து வைத்திருந்தார் என்பது ​தெரியவந்தது. 

இந்நிலையில், ஹெரோய்ன் பெற்றுக்கொண்ட இடத்தை கண்டறிவதற்காக அவ்விளைஞனிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்தனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X