2025 மே 16, வெள்ளிக்கிழமை

அமரர் பெ.சந்திரசேகரன் மகத்தான செய்தவர்: செந்தில் தொண்டமான்

Editorial   / 2023 ஜனவரி 02 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக மக்கள முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர் பெ.சந்திரசேகரன் நினைவுதினம் அனுஸ்டிக்கப்படும் நிலையில் அவர் மலையக மக்களுக்கான ஆற்றிய சேவைகள் மகத்தானவை என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அமரர் பெ.சந்திரசேகரன் நினைவுதினம் ஜனவரி 1ஆம் திகதியகும். அதனையொட்டி செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அமரர் பெ.சந்திரசேகரன் தனது ஆரம்பால அரசியலை அமரர் சௌமியமூர்த்தி  தொண்டமானின் பாசறையில் இருந்து ஆரம்பித்து அவர் வழிவந்தவர். இ.தொ.காவில் இருந்து மலையக மக்களுக்காக பல சேவைகளை ஆற்றிய அவர் பின்னர் மலையக மக்கள் முன்னணி என்ற கட்சியை உருவாக்கி சேவைகளை செய்தார்.

அமரர் பெ.சந்திரசேகரன் மறைந்த இ.தொ.காவின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுடன் நெருங்கிய நட்பை பேணியதுடன், அவருடன் இணைந்து மலையக மக்களுக்காக பல போராட்டங்களை செய்து வெற்றிக் கண்டவர்.

அவர் மலையக மக்களுக்காக ஆற்றிய பணிகள் என்றும் மகத்தான பணிகளாகும் அவரது சில முன்மாதிரியான செயல்பாடுகள் கட்சிகளுக்கு அப்பால் அனைவராலும் பாராட்டப்பட்டவை.  அமரர் பெ.சந்திரசேகரன் அவர்கள் என்னுடன்  கலந்துரையாடல்களில் ஈடுப்பட்ட சந்தர்ப்பங்களில் மலையக மக்கள் வாழ்வாதரத்தை மேம்படுத்துவதில் அதிகம் அக்கறை செலுத்தியுள்ளார்  எனவும் செந்தில் தொண்டமான் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .