2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

அமித் வீரசிங்கவின் வாகனத்தை உடைத்தனர்

R.Maheshwary   / 2022 மே 09 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேஹ்ன் செனவிரத்ன

மஹாசோன் அமைப்பின் பிரதானியான அமித் வீரசிங்க பயணித்த ஜீப்பின் மீது, பிரபல அரசியல்வாதியொருவரின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் சேதமடைந்துள்ளது என கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமித் வீரசிங்கவும் அவரது குடும்பத்தினரும் இந்த மாதம் 5ஆம் திகதி இரவு கண்டி நகரில் காத்திருந்த போது, தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுவோருக்கும் அமித் வீரசிங்கவுக்கும் இடையில் வாக்குவாதம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, அமித் வீரசிங்க பயணித்த ஜீப்பை பின்தொடர்ந்த சந்தேகநபர்கள்,லேவெல்ல பகுதியில் வைத்து, வீதியின் குறுக்கான வாகனத்தை நிறுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் அமித் வீரசிங்க மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதிப்பு ஏற்படாத பெறுமதியான வாகனம்  சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மூவர் கைதசெய்யப்பட்டு, கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை இந்த மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஸ்ரீனித் விஜேசேகர உத்தரவிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X