2025 மே 15, வியாழக்கிழமை

அமெரிக்காவின் பங்களிப்பு அவசியம்

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 08 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத் தமிழர்களின்  பொருளாதார மேம்பாட்டுக்கு அமெரிக்காவின் பங்களிப்பும் அவசியம். அதற்காக உரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதுவரிடம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

நுவரெலியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்  (Julie Chung) அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன் நேற்று (7)  பேச்சு நடத்தினார்.

நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு மலையக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்த ஜீவன் தொண்டமான்,  மலையக மக்களின் தற்போதைய நிலைவரம் பற்றியும் எடுத்துரைத்துள்ளார்.

அத்துடன், மலையக மக்களுக்கான பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வழிமுறைகள் மற்றும் அரசால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .