R.Maheshwary / 2022 மார்ச் 22 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
“மலையக மக்கள் பட்டினியில் வாடும் நிலைமையிலும், அமைச்சு பதவிக்காக பேரம் பேசும் ஆளும் தரப்பே இன்று மலையகத்தில் உள்ளது." என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிதி செயலாளர், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.
கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் நீண்ட போலின் வரிசையில் பொருட்களுக்காக நிற்கும் நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இந் நெருக்கடியான சூழ்நிலையில் மலையக தோட்ட தொழிலாளர்களுக்காக முன்னிற்க வேண்டியவர்கள், மலையக மக்கள் பட்டினியில் வாடும் நிலைமையிலும், அமைச்சு பதவிக்காக பேரம் பேசுபவர்களாகவே உள்ளனர்.
இன்றைய அரசாங்கத்தின் ஆரம்பம் முதலே, மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு, அடிக்கு மேல் அடி விழுந்து வருகின்றது. தோட்ட நிர்வாகங்களின் அதிகார துஸ்பிரயோகம் என்றும் இல்லாதவாறு அதிகரித்துள்ளது.
மக்கள் ஒரு வேளை உணவையாவது உட்க்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று மலையக மக்கள் நாளாந்தம் அதிகம் பயன்படுத்தும் கோதுமை மாவிற்கும், மண்ணெண்ணெய்க்கும் பாரிய தட்டுப்பாடு மலையக தோட்ட பிரதேசங்கள் எங்கும் நிலவுகின்றது.
இந்நிலைமைக்கு ஆளும் தரப்பில் இருந்தால் தான் அனைத்தையும் சாதிக்கலாம் என கூறி, எமது மக்களின் வாக்குகளை பெற்றவர்கள் பொறுப்பு கூற வேண்டும். ஆனால் மக்களின் இந்நிலைமை தொடர்பாக எந்த வித அக்கறையும் அவர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை. எமது மக்களின் பிரச்சினைகளை கூறி, பேரம் பேசி, மக்களை காப்பாற்ற வேண்டியவர்கள், இன்று மக்களை நடு ரோட்டில் விட்டுவிட்டு அமைச்சு பதவிக்காக அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
1 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
18 Jan 2026