2025 ஜூலை 23, புதன்கிழமை

அம்பகமுவயில் மண்சரிவு அபாயம்

Editorial   / 2017 ஓகஸ்ட் 05 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.தி.பெருமாள்

அம்பகமுவ பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில், மண்சரிவு அபாயம் உள்ளதாக, பிரதேச செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே, அபாய பிரதேசங்களை விட்டு வேறு இடங்களுக்கு செல்லுமாறும் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்களை, பிரதேச செயலாளர் பணிந்துள்ளார்.

மேலும், மலையக பகுதியில் நிலவும் தொடர் மழை காரணமாக, தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை. காற்றும் மழையும் பெய்வதினால் வீதியில்  செல்வோர் மற்றும் பணிபுரிவோர் மிகவும் அவதானமாக இருக்குமாறு, மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுபர்பாதிகாரி டிரோன் ரத்நாயக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாரிய மரங்கள் சாய்ந்து விழும் வாய்ப்பு உள்ள அதேவேளை, மண் திட்டு சரிந்து விடும் அபாயமும் தோன்றியுள்ளது. எனவே, இது தொடர்பில் மிக அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

நோட்டன் -  கினிகத்தேன வீதி மற்றும் அட்டன் நுவரெலிய வீதி  எங்கும் பனிமூட்டமாக உள்ளதால் வாகன சாரதிகளை மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு, அட்டன்
போக்கு வரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .