2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

அரச வங்கிகள் மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் பாதிப்பு

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 08 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

தொழிற்ச ங்க நடவடிக்கை காரணமாக, அரச வங்கிககள் மூடப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

புதிய வரிச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹட்டனிலுள்ள  அரச வங்கி கிளைகள் இன்று (8) காலை 10.30 தொடக்கம் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வங்கி கிளைகளை மூடிய பின்னர் அதிகாரிகளும் பணியாளர்களும் ஹட்டன் நகரில் எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக இது தொடர்பில் அறியாத வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்குச் சென்று, தமது கடமைகளை முடிக்க முடியாமல் திரும்பியுள்ளனர்.

இவ்வாறு இன்று காலை மூடப்பட்ட வங்கிக் கிளைகள் நாளை (9) காலை திறக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X