R.Maheshwary / 2022 ஜூன் 13 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
பெருந்தோட்ட பகுதிகளில் விவசாயம் செய்கின்ற காணிகளை தோட்ட நிர்வாகத்திடம் கையளிக்குமாறு, பெருந்தோட்ட அமைச்சின் பெருந்தோட்ட முகாமைத்துவ பணிப்பாளர் பிரிவின் அதிகாரி ஒருவர், கடிதம் மூலம் அறிவித்தல் விடுத்துள்ளார் என மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் தரிசு நிலங்களை விவசாயத்திற்கு பயன்படுத்துமாறு அனைவரிடமும் வேண்டுகோள்விடுத்துள்ளது. இதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் மாவட்ட செயலாளர் பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ள நிலையில், ஒரு சில அதிகாரிகள் கொழும்பில் ஏ.சி அறைகளில் இருந்து கொண்டு, சரியான தவல்களை பெற்றுக் கொள்ளாமல் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கடிதம் மூலம் அறிவிப்பது என்பது அரசாங்கத்தின் கொள்கைக்கு மாறாக அதிகாரிகள் செயற்படுகின்றார்களா? என்ற கேள்வி எமக்கு எழுகின்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹட்டன்- வெலிஒயா தோட்டத்தில் விவசாயம் செய்துவருகின்ற வேலு இராமச்சந்திரன் என்பவருடைய காணியை தோட்ட நிர்வாகத்திடம் கையளிக்குமாறு, பெருந்தோட்ட அமைச்சின் பெருந்தோட்ட முகாமைத்துவ பணிப்பாளர் பிரிவின் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி ஒருவர் காணி சட்டவிதிகளுக்கு முரனாக காணியை தன்வசம் வைத்திருப்பதாகவும் இது காணி சட்ட விதிகறுக்க முரணானது எனவும் எனவே எதிர்வரும் 05.07.2022 திகதிக்கு முன்பு காணியை தோட்ட நிர்வாகத்திடம் கையளிக்குமாறும் கடிதம் மூலம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த கடிதம் தொடர்பில் தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, தான் எந்த காரணம் கொண்டும் காணியை தோட்ட நிர்வாகத்திடம் கையளிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
எனவே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உடனடியாக இந்த கடிதம் அனுப்புகின்ற விடயத்தை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அவர்கள் பின்றபற்ற வேண்டிய நடைமுறை தொடர்பாகவும் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் எனவும் நாம் கோரிக்கை ஒன்றையும் முன்வைக்கின்றோம் என்றார்.
14 minute ago
25 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
50 minute ago
1 hours ago