Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2022 செப்டெம்பர் 18 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத் எச்.எம்.ஹேவா
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரதான உணவுகளில் ஒன்றான ரொட்டியை, அம்மக்கள் உண்ணுவதில்லை. கோதுமை மாவின் விலை அதிகரிப்பினால், இவ்வாறான துர்ப்பாக்கிய நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. ஆகையால், அது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
கண்டி கரிடாஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்தந்தை டெஸ்மன் பெரேரா, மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
“பெருந்தோட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம்” எனும் தொனிப்பொருளில் ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில், இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உலருணவு பொதிகள் முறையாக விநியோகிக்கப்பட்டதா? எத்தனை பேருக்கு வழங்கப்பட்டன. அரிசி பொதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அருட்தந்தை, இது தொடர்பில் பெருந்தோட்ட மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நாட்டுக்கு வந்து 200 வருடங்கள் கடந்துவிட்டன. எனினும், அம்மக்கள் படும் துன்பங்கள், துயரங்கள் பலருக்கு தெரியாது. ஆகையால், அம்மக்களின் துன்பங்களை எடுத்துரைக்கவேண்டும். அம்மக்களுக்கும் தெளிவுப்படுத்த வேண்டும் என்றார்.
மறுபுறத்தில், மலசலக்கூட வசதிகள் இல்லை. அவை தொடர்பிலும் அம்மக்களின் சார்பான பிரதிநிதிகள் தேடியறிய வேண்டும். பெருந்தோட்டங்களில் இடம்பெறும் மனிதவர்த்தகம், பெண்கள் மீதான வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் மற்றும் சிறுவர்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பிலும் ஆராயவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
விசேடமாக, காலி,மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மாற்று மொழியின் ஊடாக கல்வியைக் கற்கின்றனர். அவர்கள் தங்களுடைய தாய்மொழியில் கல்வியை பெற்றுக்கொள்வதற்கு இடமளிக்கவேண்டும். அத்துடன் அதற்கான வழிவகைகளை ஏற்படுத்தி கொடுக்கவும் வேண்டும்.
இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு பெருந்தோட்ட மக்கள் கடுமையான சேவைகளை செய்தார்கள், இன்னும் செய்துக்கொண்டுதான் இருக்கின்றனர். அவ்வாறானவர்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கு அமைப்புகள் மற்றும் அரசியல் தலைவர்கள் முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஆகையால் மக்களுக்காக சேவையாற்றுவதற்கு ஒவ்வொருவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago