Freelancer / 2022 பெப்ரவரி 16 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
லுணுகலை நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சுமார் 12 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் யாரும் இல்லாத வேளையில் வீட்டின் பின்புறமாக உள்ள ஜன்னல் உடைக்கப்பட்டு வீட்டின் உள் அறையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 12 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த வீட்டின் உரிமையாளர் அரிசி வியாபாரி என்பதோடு இக்கொள்ளைச்
சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
லுணுகலை பொலிஸார் மோப்ப நாய்கள் சகிதம் இன்று காலை முதல் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையிலும் இதுவரையிலும் எவரும் கைது செய்யப்படவில்லை.
அத்துடன் மேலதிக விசாரணைகளையும் லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
20 minute ago
29 minute ago
35 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
29 minute ago
35 minute ago
41 minute ago